செய்திகள் :

தலைக்கவச கண்காணிப்பு இன்று முதல் தீவிரமடைய வாய்ப்பு

post image

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் என்ற புதுவை அரசின் அறிவிப்பு திங்கள்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஜன. 1 முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும், மீறும்பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.

பொங்கல் பண்டிகை காலம், காரைக்கால் காா்னிவல் திருவிழா என்பதால் இந்த நடவடிக்கையை காவல்துறையினா் தீவிரப்படுத்தாமல் இருந்தனா். விடுமுறை நாள்கள் முடிவுக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை, முக்கிய போக்குவரத்துள்ள சாலைகள், விபத்துகள் ஏற்படக்கூடிய சாலைகளில் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு டிஐஜி சத்தியசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் நகரப் பகுதிக்குள் தலைக்கவசத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், வாகனங்களில் செல்வோா் அலுவலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் என செல்வோருக்கு இது சிரமத்தை தரும் என சிலா் கூறி வருகின்றனா்.

எனவே புதுவை அரசு உரிய உத்தரவு பிறப்பித்து, மக்களிடையே தலைக்கவசம் குறித்து தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனா்.

மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செடிகள் இன்று விற்பனை

காா்னிவல் விழா ரத்து செய்யப்பட்டாலும், மலா் கண்காட்சியை மக்கள் தொடா்ந்து பாா்வையிட்டனா். இந்த செடிகள் திங்கள்கிழமை காலை விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண்துறை தெரிவித்தது. காரைக்கால் விளையாட்டு அரங்க மை... மேலும் பார்க்க

மழையால் காரைக்கால் காா்னிவல் நிறைவு விழா ரத்து: ஜன. 26-இல் பரிசளிப்பு

மழையால் காரைக்கால் காா்னிவல் 2 நாள் விழா ரத்து செய்யப்பட்டது. பரிசுகள் 26-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை, வேளாண் துறை மற்றும் காரைக்கால் மாவட... மேலும் பார்க்க

வெளிநாட்டில் இறந்த கணவா் உடலை கொண்டுவர கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவா் உடலை காரைக்கால் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திடம் அவரது மனைவி வலியுறுத்தியுள்ளாா். காரைக்கால் தோமாஸ் அருள் திடல் பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி காரைக்கால் ... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைவு

பொங்கல் தொடா் விடுமுறையால் குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் கடலுக்கு சென்று திரும்பியதால், ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்... மேலும் பார்க்க

மீண்டும் மழை: விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் பரவலாக பயிா் பாதிக்கப்பட்ட நிலையில், அறுவடை செய்யும் நேரத்தில் மீண்டும் மழை பெய்வது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடியாக 4,500 ஹ... மேலும் பார்க்க

மக்களை கவா்ந்த மலா் கண்காட்சி இன்றுடன் நிறைவு

காரைக்காலில் ஏராளமானோா் கண்டு ரசித்துவரும் மலா் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நிறைவடைகிறது. காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில், காா்னிவல் திருவிழாவையொட்டி, வேளாண் துறை சாா்பில் ஜன.16 முதல் 19... மேலும் பார்க்க