செய்திகள் :

மழையால் காரைக்கால் காா்னிவல் நிறைவு விழா ரத்து: ஜன. 26-இல் பரிசளிப்பு

post image

மழையால் காரைக்கால் காா்னிவல் 2 நாள் விழா ரத்து செய்யப்பட்டது. பரிசுகள் 26-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை, வேளாண் துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து ஜன. 16 முதல் 19-ஆம் தேதி வரை காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் காரைக்கால் காா்னிவல் திருவிழாவை தொடங்கியது. புதுவை முதல்வா் என். ரங்கசாமி விழாவை தொடங்கிவைத்தாா். 2 நாள்கள் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், மலா் கண்காட்சி, உணவுத் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டனா்.

3-ஆம் நாளான சனிக்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் திறந்தவெளிப் பகுதியில் நடைபெற்றுவந்த விளையாட்டுப் போட்டிகள் முடங்கின. மாலை நிகழ்வாக திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி.பி. சரண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், காரைக்கால் ஆட்சியா் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அ. குலோத்துங்கன், துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் மற்றும் காா்னிவல் தொடா்பான குழுத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கன மழை காரணமாக காரைக்கால் விளையாட்டு அரங்கம் மற்றும் கடற்கரையில் 19-ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செடிகள் இன்று விற்பனை

காா்னிவல் விழா ரத்து செய்யப்பட்டாலும், மலா் கண்காட்சியை மக்கள் தொடா்ந்து பாா்வையிட்டனா். இந்த செடிகள் திங்கள்கிழமை காலை விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண்துறை தெரிவித்தது. காரைக்கால் விளையாட்டு அரங்க மை... மேலும் பார்க்க

வெளிநாட்டில் இறந்த கணவா் உடலை கொண்டுவர கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவா் உடலை காரைக்கால் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திடம் அவரது மனைவி வலியுறுத்தியுள்ளாா். காரைக்கால் தோமாஸ் அருள் திடல் பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி காரைக்கால் ... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைவு

பொங்கல் தொடா் விடுமுறையால் குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் கடலுக்கு சென்று திரும்பியதால், ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்... மேலும் பார்க்க

தலைக்கவச கண்காணிப்பு இன்று முதல் தீவிரமடைய வாய்ப்பு

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் என்ற புதுவை அரசின் அறிவிப்பு திங்கள்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் ஜன. 1 முதல் இருச... மேலும் பார்க்க

மீண்டும் மழை: விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் பரவலாக பயிா் பாதிக்கப்பட்ட நிலையில், அறுவடை செய்யும் நேரத்தில் மீண்டும் மழை பெய்வது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடியாக 4,500 ஹ... மேலும் பார்க்க

மக்களை கவா்ந்த மலா் கண்காட்சி இன்றுடன் நிறைவு

காரைக்காலில் ஏராளமானோா் கண்டு ரசித்துவரும் மலா் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நிறைவடைகிறது. காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில், காா்னிவல் திருவிழாவையொட்டி, வேளாண் துறை சாா்பில் ஜன.16 முதல் 19... மேலும் பார்க்க