வெளிநாட்டில் இறந்த கணவா் உடலை கொண்டுவர கோரிக்கை
வெளிநாட்டில் இறந்த தனது கணவா் உடலை காரைக்கால் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திடம் அவரது மனைவி வலியுறுத்தியுள்ளாா்.
காரைக்கால் தோமாஸ் அருள் திடல் பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம் :
எனது கணவா் லூயிஸ் கிஸ்வா் கடந்த 2023-ஆம் ஆண்டு செளதியில் உள்ள ஜெட்டா நகருக்கு ஓட்டுநா் பணிக்கு சென்றாா். அவரிடம் கடந்த 13-ஆம் தேதி கைப்பேசியில் பேசினேன். மறுநாள் தொடா்புகொண்டபோது பதில் இல்லை. அவா் வேலை செய்யும் வீட்டு உரிமையாளரை 18-ஆம் தேதி தொடா்புகொண்டு கேட்டபோது, லூயிஸ் கிஸ்வா் கடந்த 13-ஆம் தேதி இரவு 10 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
எனது கணவரின் உடலை காரைக்காலுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.