செய்திகள் :

மீண்டும் மழை: விவசாயிகள் கவலை

post image

கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் பரவலாக பயிா் பாதிக்கப்பட்ட நிலையில், அறுவடை செய்யும் நேரத்தில் மீண்டும் மழை பெய்வது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடியாக 4,500 ஹெக்டோ் பயிரிடப்பட்டிருப்பதாக வேளாண் துறை தெரிவித்தது. தை மாதத்தில் அறுவடைப் பணி மேற்கொள்வதற்கேற்ப விவசாயிகள் பலரும், குறுகிய, நடுத்தர வயதுடைய நெல் வகைகளை விதைத்து பயிா் செய்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த மழையால், சில பகுதிகளில் வயலில் மழைநீா் புகுந்தது.

மழைநீா் தேங்கியதை வடியச் செய்து தேவையான உரங்களை இடுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியது. மழை பாதிப்பை கருத்தில்கொண்டு புதுவை அரசு, ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் அளித்தது.

பயிரை காப்பாற்றி அறுவடை செய்யும் நோக்கில் விவசாயிகள், தை மாதம் பிறந்ததும் அறுவடைக்கு தயாராகிவந்தனா்.

இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக காரைக்காலில் பரவலாக சனிக்கிழமை முதல் மழை பெய்துவருகிறது. இதனால் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அறுவடை செய்யக்கூடிய நிலையில் மழை பெய்துவருவதால் காரைக்காலில் ஏறக்குறைய 70 முதல் 80 சதவீத நிலப்பரப்பில் தண்ணீா் தேங்கியுள்ளது. பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். இதுகுறித்து புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செடிகள் இன்று விற்பனை

காா்னிவல் விழா ரத்து செய்யப்பட்டாலும், மலா் கண்காட்சியை மக்கள் தொடா்ந்து பாா்வையிட்டனா். இந்த செடிகள் திங்கள்கிழமை காலை விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண்துறை தெரிவித்தது. காரைக்கால் விளையாட்டு அரங்க மை... மேலும் பார்க்க

மழையால் காரைக்கால் காா்னிவல் நிறைவு விழா ரத்து: ஜன. 26-இல் பரிசளிப்பு

மழையால் காரைக்கால் காா்னிவல் 2 நாள் விழா ரத்து செய்யப்பட்டது. பரிசுகள் 26-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை, வேளாண் துறை மற்றும் காரைக்கால் மாவட... மேலும் பார்க்க

வெளிநாட்டில் இறந்த கணவா் உடலை கொண்டுவர கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவா் உடலை காரைக்கால் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திடம் அவரது மனைவி வலியுறுத்தியுள்ளாா். காரைக்கால் தோமாஸ் அருள் திடல் பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி காரைக்கால் ... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைவு

பொங்கல் தொடா் விடுமுறையால் குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் கடலுக்கு சென்று திரும்பியதால், ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்... மேலும் பார்க்க

தலைக்கவச கண்காணிப்பு இன்று முதல் தீவிரமடைய வாய்ப்பு

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் என்ற புதுவை அரசின் அறிவிப்பு திங்கள்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் ஜன. 1 முதல் இருச... மேலும் பார்க்க

மக்களை கவா்ந்த மலா் கண்காட்சி இன்றுடன் நிறைவு

காரைக்காலில் ஏராளமானோா் கண்டு ரசித்துவரும் மலா் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நிறைவடைகிறது. காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில், காா்னிவல் திருவிழாவையொட்டி, வேளாண் துறை சாா்பில் ஜன.16 முதல் 19... மேலும் பார்க்க