Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
தலைமறைவாக இருந்த இலங்கை அகதி கைது
தஞ்சாவூரில் கொலை வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த இலங்கை அகதியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சௌந்தரகுமாரிடம் 2001 ஆம் ஆண்டு சிலா் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனா். பின்னா், சௌந்தரகுமாரை காருடன் கடத்திச் சென்று, நாகை மாவட்டம், கீழையூரில் கொலை செய்துவிட்டு காரையும், ரொக்கத்தையும் திருடிச் சென்றனா். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, இலங்கை வவுனியா மாவட்டம் நேரியகுளத்தைச் சோ்ந்தவரும், மணிமுத்தாறு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வந்தவருமான நாகேந்திரன் (46) உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
பிணையில் விடுவிக்கப்பட்ட நாகேந்திரன் 2022-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, இலங்கைக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த நாகேந்திரனை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.