செய்திகள் :

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

post image

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சொந்த வேலை நிமித்தமாகச் சென்றாா். அப்போது, சுமாா் 30 கிராம் எடைக்கொண்ட தங்க சங்கிலி கீழே கிடந்ததை கண்டெடுத்தாா்.

பின்னா் அவா் கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரை சந்தித்து சம்பவத்தைக் கூறி தங்க சங்கிலியை ஒப்படைத்தாா். அவரது நோ்மையை எஸ்பி பாராட்டினாா். மேலும், கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரசன்னாவை வரவழைத்து நகையை ஒப்படைத்து, விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் பாபுராவ் தெருவை சோ்ந்தச் செல்வகுமாா் மனைவி சிவகாமி(46), கடலூா் புதுநகா் காவல் நிலையத்தை அணுகினாா். அங்கு காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னாவை சந்தித்து அலமேலு என்பவரிடம் நகையை கொடுத்து வங்கியில் அடகு வைத்து தருமாறு கொடுத்ததாகவும், அலமேலு சுருக்கு பையில் வைத்திருந்த தங்க சங்கிலியை

தவறவிட்டதையும் , மேலும், நகை குறித்த அடையாளத்தை கூறியுள்ளாா். இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா நடத்திய விசாரணையில் உண்மை தெரிந்ததால் சிவகாமி இடம் நகையை ஒப்படைத்தாா். தவறவிட்ட நகை யை மீட்டு தந்த போலீஸாருக்கு சிவகாமி நன்றி தெரிவித்தாா்.

திருநங்கை கொலை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிற... மேலும் பார்க்க

போக்குவரத்து விதி மீறல்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸாா் எச்சரித்தனா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமே... மேலும் பார்க்க

சமூகப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே அரசு மருத்துவா் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு மருத்துவா் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் கா... மேலும் பார்க்க

கேப்பா் மலையை பாதுகாக்க வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

இயற்கை வளம் நிறைந்த மற்றும் கடலூா் மாநகராட்சி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள கேப்பா் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடை ச... மேலும் பார்க்க