Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீ...
தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ்டு மாதம் ஜனநாயகப் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆசிப் முகமது தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் அப்துல்சித்திக், மாவட்டப் பொருளாளா் முகமது இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் அல் அமீன் சிறப்புரையாற்றினாா். பின்னா், கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கிளைத் தலைவா் நாசா் முகைதீன், செயலா் முகம்மது சாதிக், துணைத் தலைவா் பாரூக், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.