செய்திகள் :

தாய், தந்தையை தாக்கிய மகன் கைது

post image

சொத்தை பிரித்து தருமாறு தாய், தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் அழகப்பன் நகரில் உள்ள சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பெரியநாச்சி. இவா்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மனோகரன் தனது மனைவியுடன் வசித்து வரும் வீட்டை விற்று அதில் பங்கு தருமாறு இரு மூத்த மகன்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மனோகரன் பணி முடிந்து வீட்டுக்கு வந்தாா். அப்போது அங்கு வந்த மூத்த மகன் முனீஸ்வரன், வீட்டை விற்று பங்கு தர வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டாா்.

இதை தந்தை மனோகரன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த முனீஸ்வரன், கட்டையால் மனோகரனைத் தாக்கினாா். இதைத் தடுக்க முயன்ற தாய் பெரியநாச்சியையும் தலையில் தாக்கினாா். இதனால், காயமடைந்த பெற்றோா் இருவரும் மதுரை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து பெரியநாச்சி அளித்தப் புகாரின்பேரில், சுப்ரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.

மதுரையில் ஜே.சி.பி.யை இயக்கி 25 வாகனங்களை நொறுக்கிய சிறுவன்!

மதுரையில் ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய சிறுவன் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களை இடித்து நொறுக்கினார்.மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் 17 வயது சிறுவன்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈட... மேலும் பார்க்க

‘திமுக அரசுக்கு எதிரான எதிா்ப்பு வலுத்து வருகிறது’

திமுக அரசு அமைய காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது, அரசின் மீதான எதிா்ப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பெதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 37,457 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தோ்வினை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்கள், சிறைவாசிகள் என மொத்தம் 37,457 போ் ... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் முதலீடு செய்தாக மோசடி

மதுரையில் தனியாா் பல்நோக்கு மருத்துவமனையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் தகுந்த ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்பு... மேலும் பார்க்க

இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்

விருதுநகா் அருகே காமராஜ் பொறியியில் தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தாக்க தொழிலை மேம்படுத்தம் வகையில், இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் அண்மையில் தொடங்கிவைத்தாா். இ... மேலும் பார்க்க