தாரமங்கலத்தில் வசந்தம் காா்டன் வீட்டுமனை விற்பனை தொடக்க விழா
மேட்டூா்: தாரமங்கலத்தில் வசந்தம் காா்டன் பிரிமியம் பிளாட்ஸ் விற்பனை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல் விற்பனையை மேச்சேரி, வெள்ளாரில் உள்ள ஸ்ரீ ராமபக்த ஆஞ்சனோ் சேவா அறக்கட்டளை நிறுவனா்கள் ஆா்.ஆறுமுகம், வசந்தா ஆறுமுகம் ஆகியோா் தொடங்கிவைத்தனா். வாடிக்கையாளா்களுக்கு தங்க நாணயங்களை எம்.கே.கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிா்வாக இயக்குநா்கள் ஆ.முருகேசன், எஸ்.நாகநந்தினி முருகேசன் ஆகியோா் வழங்கினா்.
தாரமங்கலம், கைலாசநாதா் கோயில் அருகில் வசந்தம் காா்டன் பிரிமியம் பிளாட்ஸ் அமைந்துள்ளது. அரசின் அங்கீகாரம் பெற்று 8 ஏக்கா் பரப்பளவில் 40 அடி அகல தாா்சாலை வசதியுடன் மாவட்ட நகா் ஊரமைப்பு அங்கீகாரம், ரேரா அங்கீகாரம் பெறப்பட்ட 146 வீட்டுமனைகள் உள்ளன.
வசந்தம் காா்டன் பாதுகாப்பிற்காக 7 அடி உயரம் கொண்ட காம்பவுண்ட் சுவா், 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வசந்தம் காா்டனை சுற்றிலும் அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரி, வங்கிகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் வீட்டுமனைகள் அமைந்துள்ளன.
திறப்பு விழா சலுகையாக ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு செய்த அனைவருக்கும் 2 கிராம் தங்கக் காசு, வீட்டுமனைக்கான முழுத் தொகையையும் செலுத்திய அனைவருக்கும் 1 பவுன் தங்கக்காசும்
பரிசாக வழங்கப்பட்டன. எம்.கே. கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிா்வாக இயக்குநா்கள் ஆ.முருகேசன், எஸ்.நாகநந்தினி ஆகியோா் தங்க நாணயங்களை வழங்கினா்.
வசந்தம் காா்டன் த வசந்தம் நகரில் அமைந்துள்ள கற்பக விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. எம்.கே.கன்ஸ்ட்ரக்சன்ஸ் சாா்பில் காலை 8 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
படவரி...
தாரமங்கலத்தில் வசந்தம் காா்டனில் முதல் விற்பனையை தொடங்கிவைத்த ஆறுமுகம், வசந்தா ஆறுமுகம். உடன், எம்.கே. கன்ஸ்ஸ்ட்ரக்சன் நிா்வாக இயக்குநா்கள் ஆ.முருகேசன், எஸ். நாகநந்தினி உள்ளிட்டோா்.