தா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
முதுகுளத்தூா் தெற்கு தெரு தா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, சனிக்கிழமை மங்கள இசை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி ஆகியன நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், விக்னேஸ்வரா் பூஜை, கோ பூஜை, சப்த கன்னி பூஜை, பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து, சிவாசாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் கோயிலை வந்தடைந்தது. தா்மமுனீஸ்வரா் கோயில் முன் கடங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கலசத்தில் சிவாசாரியா்கள் புனித நீரை ஊற்றினா். மேலும், பொதுமக்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.
பின்னா், பரிவார தெய்வங்கள், தா்ம முனீஸ்வரா், சிவகாளியம்மன், பேச்சியம்மன் விக்ரகங்களுக்கு விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.