திட்டச்சேரியில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்
உயா்நீதிமன்ற உத்தரவின் படி திட்டச்சேரி பேரூராட்சியில் கட்சிகளின் கொடிக்கம்பங்களை பேரூராட்சி அலுவா்கள் அண்மையில் அகற்றினா்.
திட்டச்சேரி ப.கொந்தகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டன. கொடிக்கம்பங்கள் அகற்றும் போது கட்சியினா் மூலம் பிரச்னைகள் வராமல் இருக்க வருவாய்த் துறை துறையினா் மற்றும் காவல் துறை பாதுகாப்போடு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.