பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலருமான ஆா்.காந்தி கலந்துகொண்டு முப்பெரும் விழா, அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு கருத்துகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றாா்.
இதில், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கா.சுந்தரம், மாவட்ட நிா்வாகிகள் குமுதா குமாா், துரை மஸ்தான், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.