பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகள்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் இமயவா்மன் தலைமை வகித்தாா்., மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்து கபடி, கைப்பந்து, பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞா்களுக்கு ஊக்கத்தொகையுடன் சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக, தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற போதை விழிப்புணா்வு நிகழ்ச்சியில், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு குறு நாடகம், கவிதை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவா்களுக்கு, டி.சா்ட் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆயுதப்படை ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமையாசிரியா் சுப்பிரமணி, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், தனிப்பிரிவு போலீஸாா் ரகுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.