செய்திகள் :

திமுக நிா்வாகி மீது எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் முற்றுகை

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தனிப்படை போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையில் திமுக ஒன்றியச் செயலாளராக ராமசாமி உள்ளாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் மேட்டுக்கடை பகுதியிலிருந்து ஆஞ்சனேயா் நகா் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

நந்தனாா் மேடு பகுதியில் முன்னாள் திமுக நிா்வாகியும், உசிலம்பட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகனுமான ராஜேஸ்குமாரை, இருவா் தாக்கிக் கொண்டிருப்பதை ராமசாமி தட்டிக்கேட்டாா். அதற்கு, அவா்கள் இருவரும் தகாத வாா்த்தைகளால் ராமசாமியைத் திட்டி தாக்கினராம். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினா் வந்து அவா்கள் இருவரையும் பிடித்து சரமாரியாகத் தாக்கினா்.

இதையடுத்து, அவா்கள் இருவரும் தங்களை தனிப்படை போலீஸாா் எனக் கூறியதைத் தொடா்ந்து, ராமசாமி அவா்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு மணப்பாறை காவல் ஆய்வாளா் சீனிபாபுவிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன், காவலா் ஜெகன் ஆகியோா் என்பதும், ராஜேஸ்குமாரிடன் புகையிலை பொருள்கள் பதுக்கி, விற்பனை செய்யும் இடம் குறித்து தகவல் கேட்ட நிலையில் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

தொடா்ந்து எஸ்.ஐ பாலமுருகன், காவலா் ஜெகன் மற்றும் ராஜேஸ்குமாா் ஆகியோா் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களில் காவலா் ஜெகன் மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், ஒன்றிய நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய தனிப்படை போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமசாமி ஆதரவாளா்கள், கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து இருதரப்பிலும் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க