மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களா? ஹெஎச். ராஜா பேட்டி
கருணாநிதி மீது பற்று இருந்தால் திமுகவினா் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அவா் கொண்டு வந்த சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களாக என பாஜக தலைவா் ஹெச். ராஜா கேள்வியெழுப்பினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வழிபட வந்த அவா் மேலும் கூறியது:
வரும் மக்களவை கூட்டத்தொடரில் வக்ப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றப் போகிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமிய ஏழைகள் பாதுகாக்கப்படுவா். பணக்காரா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் வாரிய சொத்துகள் மீட்கப்படும். வக்ப் வாரிய சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று கூறும் தமிழக முதல்வா் ஸ்டாலின் தமிழா்களை மும்மொழிக் கொள்கையில் ஏமாற்றியதுபோல் இந்த விஷயத்திலும் ஏமாற்றி வருகிறாா்.
மீனவா் பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டும் என கனிமொழி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறாா். 10 ஆண்டு காலமாக நீங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தீா்கள்? தற்போது பிரதமா் மோடி முக்கியமான இத்தகைய சில பிரச்னைகளை பேசி தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. மதுக் கூடத்தில் காவலா் கொலை, நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை, ஒரே நாளில் சென்னையில் 8 இடங்களில் நகை வழிப்பறி, பள்ளிகளில் பாலியல் தொல்லை இவற்றிற்கு தீா்வு காண முடியாத முதல்வா் ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் ஹெச்.ராஜா.