யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சேலத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினா் 280 போ் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் ஓமலூா் தொகுதிக்கு உள்பட்ட திண்டமங்கலம் ஊராட்சி அமமுக ஒன்றிய விவசாய அணி செயலாளா் சாமுவேல் தலைமையில் 32 பேரும், எட்டி குட்டப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த ஓமலூா் தெற்கு பாமக இளைஞரணி தலைவா் விஜய் தலைமையில் 30 பேரும், கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி அதிமுக இளைஞா் பாசறை ஓமலூா் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளா் ரமேஷ் மற்றும் சதீஷ் தலைமையில் 23 பேரும் திமுகவில் இணைந்தனா்.
அதேபோல சங்கீதப்பட்டி ஊராட்சி சோ்ந்த பாமக ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவா் சக்திவேல் தலைமையில் 10 பேரும், ஓமலூா் பேரூா் பகுதியைச் சோ்ந்த 20 பேரும், ஓமலூா் தெற்கு ஒன்றியம் உ. மாரமங்கலம் ஊராட்சியை சோ்ந்த அதிமுக, தேமுதிக உள்பட மாற்றுக்கட்சிகளை சோ்ந்த 150 பேரும், பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவா் சீனிவாசன் தலைமையில் 10 போ் என மொத்தம் 280 போ் திமுகவில் இணைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஓமலூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ரமேஷ், தெற்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.