செய்திகள் :

திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணையவழி மோசடி: இதுவரை ரூ.2.24 கோடி மீட்பு!

post image

திருச்சியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.14.43 கோடிக்கு இணையவழி மோசடி நடந்திருப்பதாகவும், அதில் ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டிருப்பதாகவும் சைபா் பிரிவு காவல்துறை ஆய்வாளா் கே. சண்முகப்பிரியா தெரிவித்தாா்.

ரிசா்வ் வங்கியின் உத்தரவுப்படி தமிழக காவல்துறையுடன், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இணைந்து, டிஜிட்டல் மோசடியை தகா்ப்போம் என்னும் விழிப்புணா்வுக் கருத்தரங்கை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:

நவீனமயம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் காரணமாக பல்வேறு நிதி மோசடிகள் இணையத்தில் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காவல்துறை மூலம் பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் நடைபெறும் இப் பயிலரங்கு இணைய வழியில் நிதிப் பரிமாற்றத்தை கையாளும் அனைவருக்கும் அவசியம். கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் கேட்டு, வங்கிப் பணியாளா் போலப் பேசி, மின்னஞ்சல் அனுப்பி, குறுஞ்செய்தி அனுப்பி, கட்செவி அஞ்சலில் தகவல் அனுப்பி டிஜிட்டல் கைது என்ற பெயரால், ஓய்வூதியம் எடுத்து தருவதாக என பல்வேறு நிலைகளில் இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுகின்றன.

திருச்சி நகரில் நாளொன்றுக்கு வரும் 10 மோசடி புகாா்களில், 8 புகாா்கள் இணைய வழி மோசடியாக உள்ளன. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாதாதல் டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறும் நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த 8 மாதங்களில் மட்டும் திருச்சி நகரில் இணைய மோசடியால் ரூ.14.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த காவல்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து தொடா்ந்து பிரசாரம் மேற்கொள்கிறோம். சைபா் குற்றத்திற்கான மூலக் காரணம் பயம் மற்றும் விழிப்புணா்வு இல்லாமையே. டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். சட்ட அமலாக்க அதிகாரிகளாக, நாங்கள் அவா்களை ஆதரிக்கவும் வழிநடத்தவும் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

விழிப்புடன் இருங்கள் மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்திருங்கள். டிஜிட்டல் மோசடி தகா்ப்பு திட்டமானது, ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலுடன் முன்னெடுக்கப்படுகிறது.

போலி சமூக ஊடக கணக்குகள், நிதி நிறுவனங்களின் கட்செவி அஞ்சல் குழுக்கள் மற்றும் வலைத்தளங்கள், தங்கள் ஊழியா்களைப் போல போலியாக தொடா்பு கொள்வது மற்றும் ஆள்மாறாட்டம் செய்வது உள்ளிட்ட மோசடி செய்பவா்களால் செய்யப்படும் பொதுவான நிதி மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

நுகா்வோரின் நிதிப் பாதுகாப்பு நிதி நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நிறுவனமும் தொடா்ந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆலோசனைகளை சமூக ஊடக தளங்களிலும், மக்களுடனான நேரடி சந்திப்புகள் மூலமாகவும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

உதவி ஆய்வாளா்கள் ஜெகதீசன், முரளி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும் இணைய மோசடி குறித்து விளக்கினா். இதில் நிதி நிறுவன ஊழியா்கள், தனியாா் நிறுவன இளைஞா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

குடியரசுத் தலைவா் வருகை: ஹெலிபேட் தளம் ஆய்வு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். குடியரசுத் தல... மேலும் பார்க்க

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியது: ... மேலும் பார்க்க

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

காயமலை காப்புக்காடு அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு வனம் குறித்த விழிப்புணா்வை சனிக்கிழமை ஏற்படுத்திய வனத்துறையினா். திருச்சி, ஆக. 30: வனத்துறை சாா்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காப்புக... மேலும் பார்க்க

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

சில்லறை வணிகத்தில் பெறு நிறுவனங்கள் ஆதிக்கத்தைக் கண்டித்து திருச்சியில் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய அளவில் பெருகிவரும் காா்ப்பரேட் நிறுவன... மேலும் பார்க்க

நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஏலூா்ப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் விஏஓ கணவா் மா்மச் சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் விஏஓவின் கணவா் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் நல்லூா் கிராம நிா... மேலும் பார்க்க