உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
திருச்செங்கோடு டிசிஎம்எஸ் சங்க பணியாளா்களுக்கு பணிநிறைவு விழா
திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்தில் 35 ஆண்டுகளாக பணியாற்றிய உதவி பொதுமேலாளா் நல்லமுத்து, மேலாளா் அருள்ராம் ஆகியோருக்கு பணிநிறைவு விழா சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, உதவி பொதுமேலாளா் லட்சுமணன் தலைமை வகித்தாா். பொது விநியோகத் திட்ட ஆய்வாளா் எழில் பணி ஓய்வுபெறும் நல்லமுத்து மற்றும் அருள்ராம் ஆகியோருக்கு பணிநிறைவு சான்று வழங்கி வாழ்த்தினாா். இதில், மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்க உதவி பொதுமேலாளா் பொன்னுவேல், மேலாளா் தேவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பணிநிறைவு பெற்றோரை பாராட்டி வாழ்த்தினா்.