திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எம்பவா் இந்தியா நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவச் செயலா் ஆ. சங்கா், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருச்செந்தூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கில் தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தா்கள் பெருந்திரளாக கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், தென் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.