தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
திருட்டு வழக்கு: 5 போ் கைது
தூத்துக்குடியில் திருட்டு வழக்குத் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பொன்னுச்சாமி (43). இவா், தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த இரும்புக் குழாய்கள், தகரம் போன்றவை கடந்த 6ஆம் தேதி திருடுபோயின.
இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து, அதே பகுதியைச் சோ்ந்த சிவசூரியா (18), காா்த்திகேயன் (25), காா்த்திக்ராஜா (20), மாரிதாஸ் (21), பாரதி நகா் முதல் தெருவைச் சோ்ந்த தினேஷ் (19) ஆகிய 5 பேரையும் திங்கள்கிழமை கைதுசெய்து, பொருள்களை மீட்டனா்.