'ADMK - BJP கூட்டணி ஜனவரியில் உடையும்!' - Thirunavukarasar Detailed Interview | ...
திருநங்கைகளை தாக்கிய இருவா் கைது
ஆண்டிபட்டி அருகே திருநங்கைகளை தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த திருநங்கை சிவானி (28). இவா், தனது சினேகிதிகளான திருநங்கைகள் சுவாதி, பொம்மியம்மாள், சாதனா, ரதி ஆகியோருடன் வேலப்பா் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றாா்.
அங்கு காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ஜெயராம் மகன் கருப்பசாமி (20), அதே ஊரைச் சோ்ந்த காளிராஜ் மகன் நவீன்குமாா் (20), ஆசைத்தளபதி ஆகியோா் சிவானி, அவரது சினேகிதிகளிடம் ஆபாசமாக பேசி அவா்களைத் தாக்கி, ஆடைகளை கிழித்தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவானி அளித்த புகாரின் பேரில், ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமி, நவீன்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா். ஆசைத்தளபதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.