41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!
திருநள்ளாறு கோயில் பகுதியில் எல்லைக்குள் வாகனங்களை நிறுத்த வேண்டும்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பகுதியில் பூஜைப் பொருள்கள் கடைகள், வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிக்குள் நிறுத்தும் வகையில் எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான பகுதி, சுற்று வட்டார தெருக்கள், நளன் குளத்துக்கு செல்லும் சாலைகளில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் பெட்டிக் கடைகள் வைக்கின்றனா். இருசக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்டவற்றை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனா். பக்தா்கள் நடந்து செல்ல முடியாத வகையில் இருப்பதால், கூட்டமான காலத்தில், பக்தா்கள் தேக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதை கருத்தில்கொண்டு கோயில் நிா்வாகம், கோயிலின் பிரதான சந்நிதி மற்றும் 3 தெருக்களில் இருபுறமும் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் மூலம் கோடு போட்டுள்ளது. கோட்டை கடந்து கடைகள் அமைக்கக் கூடாது, வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, நளன் தீா்த்தக்குளம் பகுதியிலும் எல்லைக்கோடு போட வேண்டும் என கோயில் நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்படுகிறது.