பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவ...
சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
பல்வேறு பகுதி சாலைகள் மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.
நிரவி-திருப்பட்டினம் தொகுதி, நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதிகளில், சிதிலமடைந்த நிரவி ஹாஜியாா் சாலை மற்றும் அதன் விரிவாக்க சாலை, விழுதியூா் வன்னியா் தெரு, கீழத்தெரு மற்றும் சிவன் கோயில் தெரு, மானாம்பேட்டை சாலை ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1.12 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடு செய்தாா்.
இதற்கான பணியாணை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட நிலையில், திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை அந்தந்த பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவை உறுப்பினா் பங்கேற்று பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன், உதவிப் பொறியாளா் ஜி. ராவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இச்சாலைப் பணிகள் 6 மாத காலத்துக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.