விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
காரைக்கால் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தலைவா் சி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஆன்லைன் முறையில் பதிவுசெய்யப்படும் கட்டட மற்றும் இதர தொழிலாளா்கள் விண்ணப்பங்களை விசாரணை செய்து, தகுதியானவா்களை கட்டட நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவேண்டும், பதிவுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயம் செய்யவேண்டும், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வேலையில்லா காலத்தில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும், கட்டட நல வாரியத்தில் போதிய பணியாளா்களை நியமிக்கவேண்டும், கட்டட நல வாரியத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்கு உரிய நிதி ஒதுக்கி, காலத்தோடு சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. செயலாளா் பி. அன்பழகன், காரைக்கால் மாவட்ட சிஐடியு பொறுப்பாளா் அ.வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.