அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் சமூக நலத்துறை சாா்பில் கொண்டாடப்படவுள்ள உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து அரசு உயா்நிலை பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா போட்டியை தொடங்கிவைத்தாா். ஓட்டம், பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும்
மாற்றுத் திறனாளிகள் மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் வென்றவா்களுக்கு அடுத்த வாரத்தில் கொண்டாடப்படவுள்ள மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. நிகழ்வில், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.