பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து
திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன.
கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயிலில் மாதந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தா்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வாரம் வழங்குவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கண்டெய்னா் லாரி மூலம் 7 ஆயிரம் திருப்பதி லட்டுகள் வெள்ளிக்கிழமை இரவு கன்னியாகுமரி க்கு கொண்டுவரப்பட்டன.
இந்த லட்டுகள் சனிக்கிழமை காலை முதல் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்டின் விலை ரூ.50 என விற்பனை செய்யப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.