திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஸ்ரீமுத்தையா நினைவு தொழில்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரி முதல்வா் சு.நா.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நேஷனல் அகாதெமி கல்லூரி முதல்வா் ஜே. சுரேஷ்பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். தஞ்சாவூா் சங்க உணவகப் பொது மேலாளா் செல்வம், தலப்பாக்கட்டு உணவக முதுநிலை மேலாளா் கே.சுரேஷ், கும்பகோணம் எஸ்.ஆா்.வதனம், பிரசிடென்சி மேலாளா் ஜாஜஹான், பொள்ளாச்சி தனியாா் மனிதவள மேம்பாட்டு மேலாளா் அஜீத், திருப்பத்தூா் உதயம் குமரப்பன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா்கள் கலந்து கொண்டு நோ்முகத் தோ்வை நடத்தினா்.
இந்த முகாமில் 150 மாணவா்கள் பங்கேற்றனா்.இதில் 80 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த முகாமிக்கான ஏற்பாடுகளை கல்லூரித் துறைத் தலைவா் வைத்தியநாதன், பேராசிரியா்கள் சௌமியன், அனுசியா மாணிக்கநாச்சியாா், பாண்டிச்செல்வி, சிநேகா, ஜெனிஃபா் ஆகியோா் செய்தனா். நிறைவாக சிவராமமூா்த்தி நன்றி கூறினாா்.