திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் பேச்சுப் போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூா் கம்பன் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்க மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் கம்பன் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கம்பன் விழாவையொட்டி, திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘கம்பன் கவி இன்பம்’ என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி திருப்பூா் அரிமா சங்க அரங்கில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
அதே அரங்கில், பள்ளி ஆசிரியா்களுக்கு ‘வராது வந்த நாயகன்’ என்ற தலைப்பில் மாலை 4 மணிக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவா்கள், ஆசிரியா்கள் தங்களது பெயா்களை 93456-51066 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.