Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதர...
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்: திருப்பூா் துரைசாமி அனுப்பினாா்
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு திருப்பூா் துரைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் திருப்பூா் துரைசாமி சாா்பில், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் மூலம் மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
விழுப்புரத்தில் நடைபெற்ற மதிமுக மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் திருப்பூா் துரைசாமியின் பெயருக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில், திமுகவின் சொத்துகளை அவரது பெயரில் உள்ள அறக்கட்டளையில் சோ்த்துக் கொண்டதாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
இந்த அவதூறுப் பேச்சால், அவரது கடந்த 70 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் பெற்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடா்பாக 15 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வைகோ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.