செய்திகள் :

திருமண பொருத்தத்திற்கு ராசி கட்டம் மட்டுமல்ல.. இதுவும் அவசியம்!

post image

ராசி கட்டத்தை பார்த்தே பலர் பலன் சொல்வதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் ராசியில் இல்லாதது மற்றைய சக்கரங்கள் / கட்டங்களில் நிச்சயம் இருக்காது எனலாம். ராசியில் சொல்லப்பட்டதைத் தெள்ளத் தெளிவாக, விரிவாகப் பலனைச் சொல்லவே பலவிதமான சக்கரங்களை/ கட்டங்களைப் பயன்படுத்துகிறோம்.

பொதுவாக திருமண பொருத்தம் பார்ப்பவர்கள், ராசி கட்டத்தையும், நட்சத்திர பொருத்தத்தையும் மட்டுமே வைத்து பலன் காண்பதால் பலவித சிரமங்களுக்கு திருமணத்திற்குப் பிறகு, இக்கால மணமக்கள் உள்ளாகிறார்கள், என்பதற்கு ஒருவித சந்தேகமும் இல்லை எனலாம். திருமணத்திற்கு முன்னர் ராசி கட்டம் பார்க்கலாமே ஒழிய திருமணத்திற்குப் பிறகு, நிச்சயம் "அம்ச கட்டம்" பார்த்தால் மிகச் சிறப்பு. ஒரு சிலர் மட்டுமே இதைப் பார்க்கவும் அதற்கான கால அவகாசத்தையும் அளிக்கிறார்கள். அப்படி அம்ச கட்டம் என்ன தான் சிறப்பு என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

1. திருமணத்திற்குப் பிறகு ஒரு துணையின் பண்புகள், இருவரிடையே பொருந்தக்கூடிய தன்மை மற்றும் வாழ்க்கை பற்றி மேலும் அறிய நவாம்ச கட்டம் (விளக்கப்படம்) பெரும்பாலும் அறியப்படுகிறது.

2. அம்சம் கட்டம், வாழ்க்கையின் பல துறைகளில் கிரகங்களால் ஏற்படுத்தப்படும் மதிப்புகள் பற்றிய நுண்ணறிவு களையும், கிரகங்களின் பலம் மற்றும் கண்ணியம் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

3. தர்மம் மற்றும் கர்மா பற்றிய வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவாம்ச விளக்கப்படம் மக்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவுகிறது.

4. அம்சம் கட்டம், என்பது பிறப்பு ஜாதகத்தில் 9வது வீட்டின் (பாக்கிய ஸ்தானத்தின்) பெரிதாக்கப்பட்ட வடிவமாகும்.

5. அம்சம் கட்டம், 9வது வீட்டின் முக்கியத்துவங்களை விரிவுபடுத்துகிறது, குறிப்பாக வாழ்க்கையின் வெற்றிக்கு இன்றியமையாத உறவுகள் போன்ற பகுதிகளில். வாழ்க்கைத் துணை அல்லது 9வது வீட்டின் நல்ல ஆதரவு இல்லாமல், வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதையும் அடைவது சவாலானதாகி விடும்.

நவாம்ச கட்டத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

நவாம்ச கட்டத்தின் ஆய்வில், கிரகங்களின் வகைகள் மற்றும் அவை ஆக்கிரமித்துள்ள வீடுகளின் அடிப்படையில் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வர்கோத்தமம்:

பிறப்பு ஜாதகம் மற்றும் நவாம்ச அட்டவணை இரண்டிலும் ஒரே ராசியில் இருக்கும் ஒரு கிரகம், ஒரு வலுவான செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படுகிறது. மேற்படி உதாரண ஜாதகத்தில் சூரியன் புதன் ஒரே ராசியான தனுசுவில் இருப்பதால், அதை வர்கோத்தமம் என அழைப்பர்.

அஸ்தாம்சம்: பிறப்பு ஜாதக ஸ்தானத்திலிருந்து நவாம்சத்தில் 8வது வீட்டில் இருக்கும் ஒரு கிரகம்.

விகாதம்சம்: பிறப்பு ஜாதகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஆனால் நவாம்சத்தில் பலவீனமான ஒரு கிரகம்.

பாபாம்சம்: நவாம்சத்தில் அசுப வீடுகளில் இருக்கும் கிரகங்கள்.

சுபாம்சம்: நவாம்சத்தில் சுப வீடுகளில் இருக்கும் கிரகங்கள்.

காரகாம்சம்: நவாம்ச அட்டவணையில் ஆத்மகாரகத்தின் (பிறப்பு ஜாதகத்தில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற கிரகம்) நிலை.

புஷ்கராம்சம்: கிரகம் பலம் பெற்று நல்ல பலன்களை அளிக்கும் ஒரு சிறப்பு அம்சம்.

அம்சம் கட்டம், ஜாதக பகுப்பாய்வில் முக்கிய புள்ளிகள்

1. ஜனன ஜாதகம் மற்றும் அம்சம் கட்டம், ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக வைக்கப்பட வேண்டும்.

2. கிரகங்கள் மற்றும் லக்னம் இரண்டு ஜாதகங்களிலும் ( ராசி கட்டம் மற்றும் அம்ச கட்டம் ) 6 / 8 நிலைகளில் வைக்கப்படக்கூடாது.

3. உயர்ந்த கிரகங்கள் அம்சம் கட்டத்தில் பலவீனமாக இருக்கக்கூடாது.

4. கிரகங்கள் அம்சம் கட்டத்தில் நட்பு, சொந்தம் அல்லது உயர்ந்த ராசிகளில் இருக்க வேண்டும்.

5. இரண்டு ஜாதகங்களிலும் ஒரே ராசியில் உள்ள கிரகங்கள் வலுவாகின்றன.

6. சுக்கிரன் அம்சம் கட்டத்தில், லக்னத்திலிருந்து 7 வது வீட்டில் இருக்கக்கூடாது அல்லது பலவீனமடையக்கூடாது.

7. ஒரு நல்ல குரு நிலை ஒரு பெண் ஜாதகத்தில் திருமண பந்தத்தை பலப்படுத்துகிறது.

8. துணையின் கிரகம் மற்றவரின் ஜாதகத்தின் 64 வது நவாம்சத்தில் வைக்கப்படக்கூடாது.

கிரகங்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் பண்புகள்

7வது வீட்டில் அல்லது 7வது வீட்டில் இருந்து 7 ல் , நல்ல நிலையில் கிரகங்கள்: ( 7க்கு 7 எனில், லக்கினத்தில் )

சூரியன்: கடின உழைப்பாளி மற்றும் மரியாதைக்குரியவர்.

சந்திரன்: அழகானவர், உணர்ச்சிவசப்படுபவர், படைப்பாற்றல் மிக்கவர் மற்றும் மதிப்புமிக்கவர்.

செவ்வாய்: இளமை, சாகசக்காரர், துணிச்சலானவர் மற்றும் இலக்கு சார்ந்தவர்.

புதன்: திறமையானவர், புத்திசாலி மற்றும் நன்கு படித்தவர்.

வியாழன்: பக்தியுள்ளவர், அறிவு மிக்கவர், அமைதியானவர் மற்றும் நேர்மையானவர்.

சுக்கிரன்: மகிழ்ச்சியானவர், அழகாக இருக்கக்கூடியவர் மற்றும் நம்பகமானவர்.

சனி: கடின உழைப்பாளி, விடாமுயற்சி உள்ளவர் மற்றும் பாரபட்சமற்றவர்.

7வது வீட்டில் அல்லது 7வது வீட்டில் இருந்து 7 ல் பாதிக்கப்பட்ட கிரகங்கள் : ( 7க்கு 7 எனில், லக்கினத்தில் )

சூரியன்: ஆதிக்கம் செலுத்துபவர், கட்டுப்படுத்துபவர், கொடூரமானவர் மற்றும் பல திருமணங்களுக்கு ஆளாக கூடியவர்.

சந்திரன்: உணர்திறன், குறிப்பிடத்தக்க வயது வித்தியாசம், சந்தேகத்திற்குரியவர் மற்றும் சட்டவிரோத உறவுகளுக்கு ஆளாகக்கூடியவர்.

செவ்வாய்: விரைவான கோபம், மனக்கிளர்ச்சி, உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்பவர் மற்றும் பிரிந்து செல்லும் வாய்ப்புள்ளவர்.

புதன்: ஏமாற்றுதல், ஆண்மையின்மை, கூச்ச சுபாவம் மற்றும் பல திருமணங்களுக்கு ஆளாகக்கூடியவர்.

வியாழன்: நேர்மையற்றவர், நேர்மை இல்லாதவர் மற்றும் விவாகரத்துக்கு ஆளாகக்கூடியவர்.

சுக்கிரன்: பல விவகாரங்கள், விவாகரத்து அல்லது பிரிவினைக்கு ஆளாக நேரிடும்.

சனி: சுயநலவாதி, சோம்பேறி, நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளவர்.

நவாம்ச லக்கினம் தரும் அருமை ,பெருமைகள்

நவாம்ச லக்கினம் அதிபதி 1,4,7,10 எனும் கேந்திரங்களில் இருப்பின் , அந்த ஜாதகருக்கு விரைவில் வாழ்வின் இளமை பருவத்திலேயே (22-25) திருமணம் நடைபெறும்.

நவாம்ச லக்கினம் அதிபதி 1, 5, 9 எனும் திரிகோணங்களில் இருப்பின், அந்த ஜாதகருக்கு சிறிது காலம் கடந்து திருமணம் நடக்கும் இருப்பினும் அது திருமண வயதுக்குள்ளதாகவே இருக்கும்.

நவாம்ச லக்கினம் அதிபதி துர்ஸ்தானம் எனப்படும் 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தும், தீய கிரஹங்களான செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேதுவால் பாதிக்கப்பட்டிருப்பின், அவர்களுக்கு நிச்சயம் 30 வயதுக்கு பிறகு தான் திருமணம்.

நவாம்ச லக்கினம் அதிபதி வெகுவாக பாதித்திருப்பவர்களுக்கு நிச்சயம் திருமணம் என்பது மறுக்கப்பட்டுள்ளது எனலாம். இத்தகைய நபர்கள் தாங்களாகவே திருமணத்தை வெறுப்பார்கள் அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் அதிருப்தி கொள்வார்கள்.

தம்பதியரிடையே நல்லிணக்கத்திற்கான அறிகுறிகள் ஒருவரின் அம்ச (நவாம்ச ) கட்டத்தில்

நவாம்ச லக்கினாதிபதி உச்சம் பெற்றிருத்தல்...

நவாம்ச லக்கினாதிபதி மூல திரிகோண ராசியில் (4 - 30 பாகைக்குள் )

அல்லது நவாம்ச லக்கினாதிபதி சொந்த வீட்டில் இருத்தல்...

இணக்கமான பிணைப்பை வளர்ப்பது

நவாம்ச லக்கின அதிபதியின் மீது நேர்மறை காரக கிரகங்கள் பார்வை இருப்பின், வாழ்க்கைத் துணையின் நேர்மறை பண்புகள் அதிகரிக்கும்...

அவ்வாறு இருப்பின் வாழ்க்கைத் துணைக்குக் கருணை, இரக்கம் மற்றும் பொறுமை இருப்பதோடு, வலுவான அர்ப்பணிப்பு மற்றும் விசுவாச உணர்வு மேலோங்கும்...

இதனால் தம்பதியர் இருவரும் ஒருவருக்கு ஒருவரின் மேற்கண்ட செயல்கள் அதிகரிக்கவே செய்யும்...

மேற்கூறியவற்றிற்கு எதிரான நிலைமை கொண்ட ஜாதகத்தில் தீய கிரகங்களின் பார்வை, தொடர்பு பெற்றிருப்பின் நிச்சயம் எதிர்மறை செயல் பாடுகளில் போராடும் குணத்தோடு இருக்கும்... பொதுவாகவே மனிதரின் தன்மை பல்வேறு காரணிகளால் தாக்கம் இருப்பது எதிர்மறை எண்ணங்களால் கிரகங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடும்... அது பரம்பரை குணத்தால், செயல்பாடுகளால், சூழலால் ஏற்படுபவைகளே...

இப்படிப் பட்டவர்களின் வாழ்க்கை நிச்சயம் தாலாட்டும் நிலையிலும், தமக்கே வெறுப்பு ஏற்படும் நிலையிலும் இருப்பதில் சந்தேகமில்லை... அவர்களின் வாழ்க்கை சலனங்களுக்கிடையே வாழ நேரிடும்.

நவாம்ச கட்டத்தில், ராகு / கேது

நவாம்ச கட்டத்தில், ராகு / கேது 7 ஆம் வீட்டையோ அல்லது 7 ஆம் வீடு அதிபதியையோ தொடர்பில் இருப்பின் பிரிவினை ஏற்படும் என நேரடியாக கூறிவிட முடியாது... துணைவரின் மீது அக்கறை கொள்வதிலோ அல்லது அவரின் கடமை, துணைவரிடம் எப்படி இருக்க வேண்டும் எனும் நிலையை அறியாமல் இருக்க நேரிடும்...

"நவாம்சம்" ஒரு பொதுவான பார்வையில் கிடைக்கபெறும் ஜாதக பலன்கள்

1. நவாம்ச கட்டத்தில், எப்போது செவ்வாய் கிரகமானது ராகு /கேதுவுடன் தொடர்பு பெற்று , புதனின் வீடுகளான மிதுனம் அல்லது கன்னியில் இருந்தால் நிச்சயம் தோல் சம்பந்தமான நோய்களுக்கு விதிக்கப்பட்டது.

2. எப்போது சுக்கிர கிரகம் ராகு / கேதுவுடன் நவாம்சத்தில் தொடர்பு கொண்டுள்ளதோ அந்த ஜாதகர் நிச்சயம் தமது சமூகத்தை விட்டு வெளியேறி வேறு சமூகத்தினரை திருமணம் செய்வதோடு அவரின் திருமணத்திற்கு பின் வரும் முதல் புத்தியில் (அந்தர் தசாவில் ) மிகவும் சிரமப்படுவர்.

3. சனியும், சந்திரனும் இணைந்து எந்த ராசியில் நவாம்சத்தில் இருந்தாலும் ஜாதகர் பணம் ஒன்றையே குறிக்கோளோடும், கஞ்சத்தனத்துடன் கூடியதையும், திருமணத்திற்கு பின் இது மிகவும் அதிகமாகும்.

4. சந்திரனும், செவ்வாயும் இணைந்து நவாம்சத்தில் எந்தராசியில் இருப்பினும் முக்கியாயமாக 7 அல்லது 8 ஆம் வீட்டில் இருப்பின் நிச்சயம் பெண்ணாக இருப்பின் மகளிர் மருத்துவ பிரச்னையையும், ஆணாக இருப்பின் ரத்த அழுத்த சம்பந்தமான பிரச்சினையையும் முக்கியமாக திருமணத்திற்கு பின் அனுபவிக்க வேண்டி வரும்.

5. குரு கிரகம் அதிர்ஷடத்திற்கும் செல்வத்திற்கும் காரக கிரகமாக இருப்பதால், இந்த குரு கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது சொந்த வீட்டில் இருந்தாலோ சொத்து விஷயத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் திருமணத்திற்கு பின்னர் நிச்சயம் அடைவார்...

6. சூரியன் நவாம்சத்தில் மேஷத்தில் இருப்பின் அது உச்சம் நிலை என்பதால், அப்படிப்பட்ட அமைப்பை உடைய ஜாதகர் இளம் வயதிலேயே தலை வழுக்கையாக இருக்க வாய்ப்பு... மேலும் இது, மேஷம் தலையை குறிப்பதாலும் ஆகும்.

முக்கியமான குறிப்புகள்

சரியான பிறப்பு குறிப்பு இருந்து அவை மூலம் காணப்படும் அம்சம் (நவாம்ச) நிலையே இவற்றுக்குப் பலனைக் காண வேண்டும். ஏனெனில் ஒரு 3 நிமிட நேர வித்தியாசம் கூட நவாம்ச நிலையை மாற்றிவிடக்கூடும். சரியான பலனைக் காண்பது அரிதே.

ஒரு சிலர் நவாம்ச கட்டத்தை மட்டுமே காண்பர். அதுவும் தவறு. ராசி கட்டம் உடல் என்றால், அம்சம் கட்டம் ஆத்மா ஆகும்.

சரியான பிறப்பு குறிப்பு, சரியான கிரக நிலை அறிந்த ஜோதிடர், சரியான கால அவகாசம் இவை அனைத்துமே ஒரு திருமண பொருத்தத்தைத் தீர்மானிக்கும்.

இவ்வளவு இருக்கக்கூடிய இந்த நவாம்சத்தை பார்க்காமலேயே , ராசி கட்டத்தை மட்டும் வைத்து திருமண பொருத்தத்தை முடிவு செய்வதால், நிறையக் குழப்பங்களும், விவாகரத்துகளும் நடைபெறுவதைக் களைவதற்கு , இந்த நவாம்சம் தொடர்பான கட்டுரை.

இதனைப் புரிந்து செயல்படும்போது நிச்சயம், நிறைய விவாகரத்துகளை, திருமண பொருத்தம் காணும்போது அவை நடைபெறாமல் தடுக்க முடியும் என்பது உறுதி.

•••••

தொடர்புக்கு : 98407 17857 / 91502 75369

இதையும் படிக்க: ஒருவரின் ஆன்மிக திறனைப் புரிந்துகொள்வது எப்படி?

ஒருவரின் ஆன்மிக திறனைப் புரிந்துகொள்வது எப்படி?

உலகின் பல பொருள்களைக் கையாள, அளக்க ஒவ்வொரு கருவிகளையும், அதற்கொப்ப குறியீடுகளும் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு நீள அளவிற்கு மீட்டர், கிலோமீட்டர் போன்றவையும், பொருளின் எடைக்குக் கிராம... மேலும் பார்க்க

திருமண பொருத்தமும் தம்பதியரிடையே சிக்கல் தீர்க்கும் வழிகளும்!

திருமணப் பொருத்தம் என்பது வெறும் நட்சத்திர ரீதியான 10 பொருத்தங்கள் மட்டும் தானா.. என்றால் இல்லை. இருவரின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக பொருத்தங்களும் முக்கியமானதாகும். அவ்வாறு இல்லையெனில் நிச்சயம் தம்பத... மேலும் பார்க்க

பிறந்த நட்சத்திரம் பலமா? பலவீனமா? பலம் கூட்டுவது எப்படி?

ஜென்ம நட்சத்திரம் என்பது ஒளி கிரகமான சந்திர பகவானின் நகர்வு கொண்டு கணிப்பது. அவர் ஒரு ராசியில் பயணிக்கும் காலம் 2.5 நாள்கள். ஒரு ஜாதக கட்டத்தில் 27 நட்சத்திரங்கள் அனைத்தும் 12 கட்டத்தில், 360 பாகையில்... மேலும் பார்க்க

லக்ன ரீதியாக யார் யார் எந்த நவரத்தின கற்களை அணியலாம்?

நவரத்தின கற்களை அணிவதில் பலருக்கும் குழப்பம் இருக்கலாம். இங்கே லக்ன ரீதியாக எந்த நவரத்தின கற்களை அணியலாம் என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.மேஷம் லக்னம் "செவ்வாய்", மேஷத்தை ஆளும் கிரகம். சூரியனும் கு... மேலும் பார்க்க