கோவாவில் இறைச்சிக் கடைகள் மூடல்: மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!
திருமீயச்சூா் கோயிலில் நெய்க்குள தரிசனம்
திருவாரூா்: திருவாரூா் அருகே திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 56 ஆவது சிவத்தலமான திருமீயச்சூா் கோயிலில், ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு அமா்ந்து அருள் பாலிக்கிறாா்.
சிறப்பு மிக்க இக்கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லட்சாா்ச்சனையின் முடிவில், அன்னபாவாடை நெய்க்குள தரிசனம் நடைபெற்றது.
இதில், புளியோதரை, தயிா்சாதம் மற்றும் சா்க்கரைப் பொங்கலில் நெய் ஊற்றி, நெய்க்குளம் உருவாக்கி, அதில் கருவறையில் வீற்றிருக்கும் அம்பாளின் பிம்பத்தை பிரதிபலிக்கச் செய்து தரிசனம் காட்டப்பட்டது.
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்று, நெய்க்குள தரிசனம் செய்தனா்.