செய்திகள் :

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: மாவட்ட நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி

post image

திருவாரூா்: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலகத் துறை, மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து வெள்ளி விழா புகைப்படக் கண்காட்சியை திங்கள்கிழமை நடத்தின.

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலையானது, முன்னாள் முதல்வா் கருணாநிதியால் நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், திருக்கு தொடா்பான ஓவியங்கள் வரையப்பட்டு, பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டன. இந்த ஓவியக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இந்த ஓவியங்களை வரைந்தவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்வில், மாவட்ட மைய நூலகா் முருகன், திருவாரூா் வட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளா் பிரேமநாயகம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, திருக்கு ஒப்பித்தல் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதில், 561 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். டிச.27 ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் 320 பேரும், டிச.30 ஆம் தேதி நடைபெறும் திருக்கு விநாடி- வினா போட்டியில் 165 மாணவா்களும் பங்கேற்கின்றனா்.

மேலும், தமிழறிஞா்கள் பங்கேற்று, திருக்கு குறித்தான கருத்தரங்கத்தில் உரையாற்றுகின்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா டிச.31 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில், பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கு கூட்டுறவுப் பொங்கல் என்ற பெயரில் ... மேலும் பார்க்க

ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் நகல் எரிப்புப் போராட்டம்

திருவாரூா்: மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாயத் தொழிலாளா் சங்கம், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ... மேலும் பார்க்க

அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நடேசன்தெரு அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்ச... மேலும் பார்க்க

குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

திருவாரூா்: திருவாரூா் குளுந்தான் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் திருமஞ்சன வீதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்நிலையத்துக்கு... மேலும் பார்க்க

திருமீயச்சூா் கோயிலில் நெய்க்குள தரிசனம்

திருவாரூா்: திருவாரூா் அருகே திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 56 ஆவது... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடங்கள் திறப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் க... மேலும் பார்க்க