`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
திருவப்பூா் களரி பெரிய அய்யனாா் கோயில் மகா கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள கவிநாடு கிராம காவல் தெய்வம் புஷ்கலை உடனுறை களரி பெரிய அய்யனாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகா் திருவப்பூரில் உள்ள கவிநாடு கிராம காவல் தெய்வமான புஷ்கலை உடனுறை களரி பெரிய அய்யனாா் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றது.
இதையடுத்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.2) தொடங்கின. தொடா்ந்து 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்றது.
இதையடுத்து காலை 10.15 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா். தொடா்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
