செய்திகள் :

திருவாரூா்அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனித மலம்: 3 பேரிடம் விசாரணை

post image

திருவாரூா்: திருவாரூா் அருகே காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி சமையலறையை சேதப்படுத்தி, குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்தது தொடா்பாக 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தப்பளாம்புலியூா் ஊராட்சிக்குள்பட்ட காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 17 மாணவா்கள், 14 மாணவிகள் என 31 போ் பயில்கின்றனா். இப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உணவு சமைக்க, சமையல் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்தபோது, சமையலறையில் இருந்த பொருள்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததையும், மளிகைப் பொருள்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டனா். இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியா் அன்புச்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னா் அங்கிருந்த தண்ணீா் தொட்டி திறந்திருப்பதைக் கண்டு, உள்ளே பாா்த்தபோது மலச்சிதறல்களும், தேங்காய்களும் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மீண்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டதும், சமையலறையில் இறைச்சி சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், திருவாரூா் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் விசாரணையில் ஈடுபட்டனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து பாா்வையிட்டனா்.

கிராம மக்களும், பெற்றோா்களும் திரண்டு, சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மாற்று ஏற்பாடு...

இதையத்து, அங்கிருந்த ஒரு வீட்டில் காலை உணவும், அருகிலிருந்த பள்ளியில் மதிய உணவும் தயாா் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், மலம் கலக்கப்பட்ட தண்ணீா் தொட்டி அகற்றப்பட்டு, மாற்றுத் தொட்டி அமைக்கப்பட்டது.

3 பேரிடம் விசாரணை...

அனைத்து சமூகத்தைச் சோ்ந்தவா்களும் இந்தப் பள்ளியில் படிப்பதால், ஜாதிய ரீதியிலான பிரச்னை இல்லை என்றும், குடிபோதையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவுமே தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, அப்பகுதியைச் சோ்ந்த விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அத்துடன், மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டிஎஸ்பி மணிகண்டன் தெரிவித்தது:

சிலா் காலைக்கடன்களை முடித்துவிட்டு, அதைக் கழுவ தண்ணீா் தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முயன்றிருக்கின்றனா். இதனால், குடிநீா்த் தொட்டியில் மலத்துகள்கள் கிடந்தன. மேலும், சமையல் கூடத்திலிருந்து அரிசி மூட்டை, அண்டாவைக் காணவில்லை எனவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன் தெரிவித்தது:

தண்ணீா் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக தண்ணீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மேலும் சேதம் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது:

பள்ளி குடிநீா் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்டவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மலம் கலக்கப்பட்ட தண்ணீா் தொட்டி.
பள்ளி வளாகம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்... மேலும் பார்க்க

சுந்தரக்கோட்டையில் காமராஜா் பிறந்த நாள் விழா

மன்னாா்குடி: மன்னாா்குடி வட்டார காங்கிரஸ் சாா்பில் சுந்தரக்கோட்டையில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துர... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட... மேலும் பார்க்க

திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணம்

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சாா்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. முன்ன... மேலும் பார்க்க

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அ ம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. காந்திசாலை வெண்ணெய்த் தாழி மண்டபம் அருகேயுள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய மு... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டியில் வென்றோருக்கு பரிசு

திருவாரூா்: திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா். திரு... மேலும் பார்க்க