செய்திகள் :

தில்லி பாணியில் மமதா ஆட்சிக்கு முடிவு: சுவேந்து அதிகாரி

post image

தில்லியில் ஆம் ஆத்மியை தோற்கடித்ததுபோல, மேற்கு வங்கத்திலும் மமதா ஆட்சிக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது. 2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றிப் பெற்றுள்ள நிலையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காவிக் கட்சி வெற்றி பெரும் அடுத்த மாநிலமாக மேற்குவங்கம் இருக்கும் என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

வரும் 2026 மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சுவேந்து அதிகாரி, ”தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு தகுந்த பதிலைக் கொடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தில்லியின் பெருமையை மீண்டும் கொண்டுவந்து தூய்மையான நகராக மாற்றமுடியும்.

தில்லியில் உள்ள பெரும்பாலான வங்க மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள். ஆம் ஆத்மிக்கு எதிரான வெற்றியைப் பெற்றுதந்த பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன், இனி தில்லி மக்களுக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசின் பலன்கள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜ... மேலும் பார்க்க

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.இது த... மேலும் பார்க்க

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில... மேலும் பார்க்க

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வ... மேலும் பார்க்க

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க