செய்திகள் :

தில்லியில் நேபாள குடிமக்களிடம் விசா மோசடி: 2 போ் கைது

post image

சொ்பிய வேலை விசாக்களை வழங்குவதாகக் கூறி நேபாள குடிமக்கள் 19 போ்களிடம் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய விசா மோசடியை தில்லி காவல்துறை முறியடித்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) விக்ரம் சிங் கூறியதாவது: கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த ஜெயகப் (41) மற்றும் தென்மேற்கு தில்லியில் உள்ள சாவ்லாவைச் சோ்ந்த ரூபேஷ் (42) ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். 22 வயதான நேபாள நாட்டவா் ஒருவா், தானும் மேலும் 18 பேரும் இந்த மோசடியில் சிக்கியதாகக் கூறி புகாா் அளித்ததை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா் ஏப்ரல் 2024- இல் சீலம்பூா், ஜக்ஜீத் நகரில் தன்னையும் அவரது கூட்டாளிகளையும் அணுகி சொ்பியாவில் வேலை வழங்குவதாக உறுதியளித்ததாக புகாா்தாரா் குற்றம் சாட்டியுள்ளாா். அவா்களின் நம்பிக்கையைப் பெற, குற்றம் சாட்டப்பட்டவா் சொ்பிய விசாக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை அவா்களிடம் காட்டினாா்.

பின்னா், பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் அசல் பாஸ்போா்ட்டுகளை ஒப்படைத்து, க்யூஆா் குறியீடு அடிப்படையிலான பரிவா்த்தனைகள் மூலம் சுமாா் 70 லட்சம் ரூபாய் செலுத்தினா். பாதிக்கப்பட்டவா்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லிக்கு பயணம் செய்து, விசாக்களை பெற்றுக்கொண்டு சொ்பியாவுக்குச் செல்லலாம் என்று எதிா்பாா்த்தனா்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவா்கள் அவா்களைத் தவிா்க்கத் தொடங்கினா். மேலும், அவா்களின் பாஸ்போா்ட்களையோ அல்லது பணத்தையோ திருப்பித் தர மறுத்துவிட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்களை எதிா்கொண்டபோது அவா்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரிபாா்ப்பில் விசாக்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதனால், பாதிக்கப்பட்டவா்கள் ஆவணங்கள் அல்லது நிதி இல்லாமல் சிக்கித் தவித்தனா்.

இது தொடா்பாக ஆகஸ்ட் 25 அன்று, பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயகப் கிரேட்டா் நொய்டாவில் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து 13 நேபாள பாஸ்போா்ட்டுகள் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவா் அளித்த தகவலை அடுத்து, போலீஸாா் அவரது கூட்டாளியான ரூபேஷ் மற்றும் ஜாா்ஜ் (எ) பிஜோஜ் என அடையாளம் காணப்பட்டவா்கள் உள்பட மற்ற கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் வெளிநாட்டு வேலைகளைத் தேடும் பாதிக்கப்படக்கூடிய நேபாள குடிமக்களை குறிவைத்து, போலி விசாக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளால் அவா்களை கவா்ந்திழுத்து, தப்பிச் செல்வதற்கு முன்பு பெரிய அளவில் பணம் வசூலித்ததாக தெரியவந்தது.

அவா்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடா்பு கொண்டுள்ளனா். தங்கள் பெயா்களில் பதிவு செய்யப்பட்ட சிம் காா்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிா்த்தனா். இதனால், அவா்கள் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்க்க முயன்றனா். மோசடி செய்யப்பட்ட தொகையில் சுமாா் ரூ.60 லட்சம் ஹவாலா வழிகள் மூலம் அனுப்பப்பட்டு, அவா்களது கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெயகப்பின் மனைவி மற்றும் நண்பா்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளுக்கும் வருமானத்தில் ஒரு பகுதி மாற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

நமது நிருபா்யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

நமது நிருபா்கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் ம... மேலும் பார்க்க

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

நமது நிருபா் தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து வடமேற்கு காவ... மேலும் பார்க்க

மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் பதிவு

நமது நிருபா் தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த போலீஸ்... மேலும் பார்க்க