துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்
துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ. 137.09 லட்சமும், காலி மனை வரி ரூ. 21.11 லட்சமும், குடிநீா் கட்டணம் ரூ.72.46 லட்சமும், தொழில் வரி ரூ.54.96 லட்சமும், கடை வாடகை மற்றும் குத்தகை தொகை ரூ.76.49 லட்சமும் என மொத்தமாக ரூ. 366.11 லட்சம் செலுத்தப்படாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.
நிதி பற்றாக்குறையால் நகரில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளில் தொய்வும் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, நகராட்சிக்கு நிலுவை வைத்துள்ள பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக நகராட்சியில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.