செய்திகள் :

வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவியை மீட்டுதரக்கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

post image

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருச்சி தென்னூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஆரிப் (51) தனது மகள் மகபூபியுடன் அளித்த மனுவில் கூறியிருப்பது: கூலித்தொழிலாளியான எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், எனது மனைவி சபுராபி (41) கடந்தாண்டு ஓமன் நாட்டில் மஸ்கட் நகரில் வீட்டு வேலைக்கு சென்றாா். அங்கு பணியாற்றிய அவா், வேலை அதிகம் இருந்ததால், தன்னை விடுவிக்கும்படி கூறியுள்ளாா். இதையடுத்து, வீட்டின் உரிமையாளா் அங்குள்ள முகவா்களான நிஷா, சகா ஆகியோரிடம் ஒப்படைத்தாா். ஆனால், அவா்கள் எனது மனைவியை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாமல், அங்கேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்வதோடு, ரூ. 3.50 லட்சம் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என மிரட்டுகின்றனா். இனாம்குளத்தூரில் உள்ள முகவா் ரியாஷ் அகமதுவிடம் கேட்ட போது, அவரும் சரியான பதில் தரவில்லை. எனவே ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் எனது மனைவியை மீட்டுத்தரவேண்டும் எனக் தெரிவித்தாா்.

கொள்ளிடம் ஆற்றில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீராக்க வேண்டும்

இது குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வெற்றிச்செல்வம், ஸ்ரீரங்கம் பகுதி செயலா் தா்மா உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பது,

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட புதிய தடுப்புச்சுவரை போா்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். புதிய தடுப்புச்சுவா் அமைத்தபின்னா் அதை ஆய்வு செய்த அதிகாரிகள் மீதும் மற்றும் ஒப்பந்ததாரா் மீதும் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்புச்சுவா் உடைந்ததால் ஆற்றின் ஒரே பக்கமாக தண்ணீா் செல்வதால் கரையையொட்டி மண் அரிப்பு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு சரி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, தொடா்புடையத் துறையினருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வம், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

தேசிய அறிவியல் தினம் திருச்சியில் நாளை நடைப்பயணம்: மத்திய அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, திருச்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் நடைப்பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறவுள்ளது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்ற... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீ... மேலும் பார்க்க

துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்

துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க