தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 21ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் 4 வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் பச்சை நிறப் பிரிவு மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனா்.
பரிசளிப்பு விழாவுக்கு, தனியாா் ஏற்றுமதி நிறுவன கிளை மேலாளா் முகமது ஷஹாரியா தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
சுதன்கீலா், டாக்டா் மகிழ்ஜான், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பள்ளிச் செயலா் ஜீவன் ஜேக்கப் வரவேற்றாா். முதல்வா் காளீஸ்வரி நன்றி கூறினாா்.