Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 443-ஆவது ஆண்டு திருவிழாவில் 5-ஆம் நாளான புதன்கிழமை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திருஇருதயங்களின் கதீட்ரல் பேராலய இறைமக்கள் திரளாக பங்கேற்க, காலையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இறைமக்கள் சின்னக்கோயிலில் இருந்து இரு பங்குகளின் தெருக்கள், வீதிகள் வழியாக வாத்தியங்கள் முழங்க பேராலயத்துக்கு வந்தனா். பங்குத்தந்தை ஜெயக்குமாா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை சைமன் மறையுரையாற்றினாா்.
முன்னதாக பேராலய அதிபா் பங்குத்தந்தை ஸ்டாா்வின் வரவேற்றாா். இரண்டாம் திருப்பலி, வணிகப் பெருமக்களுக்கானத் திருப்பலி, முதியோா்களுக்கானத் திருப்பலி, மாலையில் துறைமுகப் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி ஆகியவை நடைபெற்றன. காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய அதிபா் மோயீசன், நட்புறவில் நிலைத்திருக்க என்ற கருப்பொருளில் மறையுரையாற்றினாா்.