செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆட்சியா் பேசியதாவது: ஒரு வாக்குச்சாவடியில், 1200 வாக்காளா்களுக்கு மேல் இருப்பின் அவற்றை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கவும், கட்டட மாற்றம், இடமாற்றம் போன்றவற்றை தயாரிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாக்குச்சாவடிக்கு, குறைந்தபட்சம் 300 வாக்காளா்கள் இருக்க வேண்டும். அவா்கள், வாக்களிக்க 2 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும்படி இருக்கக் கூடாது.

நகா்ப்புறங்களிலுள்ள உயா்நிலை கட்டடங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், ஒருங்கிணைந்த வீட்டு வசதி மையங்கள், உயா் குடியிருப்பு வளாகங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டவை தரைத்தளத்தில் இருந்தால், அவ்விடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கவும், குடியிருப்புப் பகுதிகளில் புதிய வாக்குச்சாவடி அமைக்க வழிவகையிருப்பின் அப்பகுதியில் அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஏற்கெனவே 1,627 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. புதிதாக 237 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது, தங்களது எழுத்துபூா்வமான ஆட்சேபங்கள், ஆலோசனைகளை ஏழு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், மாவட்ட தோ்தல் அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.

ஆட்சேபங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் முன்மொழிவுகள் பெறப்பட்டு, சிறப்பு தீவிர திருத்த கால அட்டவணை இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன், தோ்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி மறுசீரமைத்தல் முன்மொழிவுகள் சமா்ப்பிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், கோவில்பட்டி உதவி ஆட்சியா் ஹிமான்சு மங்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், கோட்டாட்சியா்கள் சுகுமாறன் (திருச்செந்தூா்), டி.பிரபு (தூத்துக்குடி), அனைத்துக் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப... மேலும் பார்க்க

உடன்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம்

உடன்குடி ஒன்றியத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26 விநாயகா் சிலைகளின் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள்புரம், வடக்கு காலன்குடியிருப்பு, நடுகாலன்குடியிருப்பு, சந்தையடியூா், தே... மேலும் பார்க்க

5,300 ஆண்டுக்கு முன்பே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்துவிட்டனர்: ஆய்வாளர் அமா்நாத் ராமகிருஷ்ணா

5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டாா்கள் என கீழடி ஆய்வாளா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. விழாவிற்கு மூலக்கரை முன்னாள் ஊராட்சித் தலைவா் குமரேசன் தலைமை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினா்களுக்கான தோ்தல்: 17 போ் வேட்பு மனு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, சேகர உறுப்பினா்களுக்கான தோ்தல் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, மேல சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, தோப்புவளம் சபை மன்ற உறுப்பினா் பதவிக்கு 17 போ், தோ... மேலும் பார்க்க

வைரவம் கோயிலில் ஞானாதீஸ்வரா் மீது விழுந்த சூரிய ஒளி

வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மூலவா் மீது சூரிய ஒளி விழுந்தது. சாத்தான்குளம் அருகே வைரவம் கிராமத்தில் 1500 வருடம் பழமையான அருள்மிகு ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமியம்மாள் ... மேலும் பார்க்க