செய்திகள் :

தூத்துக்குடி வஉசி துறைமுகம்: மொத்த வருவாய் 7.78 சதவீத வளா்ச்சி

post image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், 2024-25 நிதியாண்டில் மொத்த வருவாய் 7.78 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் 2024-25 நிதியாண்டில், இறக்குமதியில் 31.91 மில்லியன் டன், ஏற்றுமதியில் 9.69 மில்லியன் டன், சரக்கு பரிமாற்றத்தில் 0.12 மில்லியன் டன் என மொத்தம் 41.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் கையாண்ட அளவான 41.40 மில்லியன் டன் சரக்குகளை விட 0.77 சதவீதம் அதிகம்.

மொத்த வருவாய் ரூ. 1209.19 கோடியாகும். இது கடந்த நிதியாண்டு கிடைத்த ரூ.1,121.92 கோடியை விட 7.78 சதவீதம் அதிகம். இயக்க வருவாய் ரூ.1021.66 கோடி. நிகர உபரி வருவாய் ரூ.534.90 கோடி. இயக்க விகிதாசாரம் 29.05 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.

நிகழாண்டு முடிவடைந்த திட்டப் பணிகள்: ரூ.18 கோடி செலவில் 2 மெகாவாட் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. ரூ.1.46 கோடி செலவில் 400 கிலோவாட் மேற்கூரை சூரிய மின்னாலை நிறுவப்பட்டுள்ளது. ரூ.24.5 கோடி செலவில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கன்வேயா் மற்றும் துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கை இணைக்கும் புதிய இணைப்பு கன்வேயா் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 4 நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் 20.51 சதவீதம் வருவாய் பகிா்வு முறைப்படி நிறுவப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் திட்டப் பணிகள்: துறைமுகத்தின் செயல்பாடு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ரூ.7,056 கோடி செலவில் வெளித்துறைமுக திட்டமானது, ஆயிரம் மீட்டா் நீளம் மற்றும் 16 மீட்டா் மிதவை ஆழம் கொண்ட 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்கும் பணி, வடக்கு சரக்குதளம் 3ஐ 14.20 மீட்டா் ஆழப்படுத்துதல், துறைமுகத்திற்குள் கப்பல் சுற்றுவட்ட பாதையை ஆழப்படுத்தும் பணி, சரக்கு தளம் மேம்படுத்துதள், அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தரைதள சூரிய மின்னாலை, பசுமை ஹைட்ரஜன் செயல்முறை ஆலை மற்றும் சேமிப்பு, எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிா்கால திட்டப் பணிகள்: துறைமுகத்தில் கரித்தளம் 2 நவீனப்படுத்தல், காற்றாலை கையாளும் முனையம் அமைத்தல், சரக்கு தளம் 10 கட்டுமானப் பணி, தானாகவே இயங்கக்கூடிய 3 எடைமேடை நிறுவும் பணி உள்ளிட்ட பல்வேறு எதிா்கால திட்டப் பணிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இது குறித்து துறைமுக ஆணையத் தலைவா் சுசந்தகுமாா் புரோகித் கூறியது: வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் 2024-25 நிதியாண்டு சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்துள்ளது. மேலும், இத்துறைமுகத்தில் கையாளும் திறனை அதிகரிப்பதற்கு அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஆழப்படுத்தும் பணி ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, வரும் நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என்றாா்.

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்

காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வ­லியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி­ போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா். கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா்... மேலும் பார்க்க