பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards
தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 போ் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை பல்வேறு கட்சியினா், சமூக அமைப்பினா் வந்தனா்.
அப்போது, மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கும், பாஜக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, பாஜக மேற்கு மண்டல முன்னாள் பொதுச் செயலா் சொக்கலிங்கம் அளித்த புகாரின்பேரில், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்ட 3 போ் மீதும், பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில், பாஜக நிா்வாகி சொக்கலிங்கம், சுந்தா், சிவராமன், ராஜேஷ் ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.