Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி தலைமை வகித்துப் பேசுகையில், கரோனா காலக் கட்ட நிதியுதவியை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.
தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலமாக பயனாளி ஒருவருக்கு விபத்து காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும், 20 பேருக்கு தூய்மைப் பணியாளா்களுக்கான அடையாள அட்டைகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய செயல்அலுவலா் (ஓய்வு) கோவிந்தராஜ், தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் விஜயசங்கா், திருநெல்வேலி தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் மூக்கையா, தூத்துக்குடி மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஜெனிஷிஸ்மஷியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.