Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
தெள்ளாா் அரசு பெண்கள் உயா்நிலை பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
தெள்ளாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெள்ளாா் ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் அஜித் தலைமை வகித்தாா்.
தூய்மைப் பணியாளா் சிவகாமி சங்கக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கிவைத்தாா்.
நிா்வாகிகள் சு.சிவக்குமாா், வழக்குரைஞா் சுகுமாா், ர.தீபநாதன், விஸ்வநாதன், ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா்.
கடந்த கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற தெள்ளாா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து ஒன்றிய புதிய தலைவராக வழக்குரைஞா் திலகராஜ், செயலராக மோனிஷ், பொருளராக அஜித் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தெள்ளாரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும், பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், அருங்குணம், சத்தியவாடி, மாவளவாடி ஆகிய கிராமங்களுக்கென கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.