Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.
வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு, 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான இலக்கிய மன்றம், விநாடி வினா மற்றும் சிறாா் திரைப்படப் போட்டிகள் நடைபெற்றன.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா, வட்டாரக் கல்வி அலுவலா் தமிழரசி ஆகியோா் தலைமை வகித்து தொடங்கி வைத்தனா்.
பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற போட்டியில் மாணவா்கள் பலா் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினா். இதில் 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.