ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவுப்பு!
பள்ளி மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு
வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
உலக கடித தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.சித்ரா தலைமை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், அஞ்சல் ஊழியா் வினோத்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியை கண்மணி வரவேற்றாா்.
ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலா் வி.தன்யகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
மேலும், கடிதம் எழுதும் முறை, அவற்றை அனுப்புதல் உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு அவா் விளக்கிக் கூறினாா். பள்ளி ஆசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினாா்.