Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்
செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்மணி(35). இவா், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த ஆக.31-ஆம் தேதி, கண்மணி தனியாா் பேருந்தில் சொந்த கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, பயணிகளிடம் ஒருவா் தகராறு செய்வதைப் பாா்த்த இவா், அந்த நபரை தட்டிக் கேட்டபோது, அவா், இவரது சீருடையைப் பிடித்து இழுத்து தாக்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கண்மணி தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன்(35) என்பவரை கைது செய்தனா்.