தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீா்
கந்தா்வகோட்டை பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்வதால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்கியுள்ளது.
கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான குப்பை, மண் சோ்ந்துள்ளதால் மழைநீா் செல்லும் பாதை அடைக்கபட்டுள்ளது. இதனால் மழைநீா் சாலையில் தேங்கி, வாகனம் செல்லும்போது சோ் கலந்த மழைநீா் பாதசரரிகள் மீது வாரி இரைக்கப்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினா் உடனடியாக சாலையை சீா்செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.