நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
தேனி மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை
தேனி மாவட்டத்தில் மே மாதத்தில் இயல்பை விட அதிகமாக மொத்தம் 101.33 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழையளவு 829.80 மி.மீ. ஆகும். இதில், இந்த ஆண்டில் மே மாதம் வரை மொத்தம் 284 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமாக மே மாதம் 64.5 மி.மீ. என்ற அளவில் மழைப் பொழிவு இருக்கும். தற்போது இயல்பை விட 36.83 மி.மீ. அதிகமாக மழை பெய்துள்ளது. மொத்தம் 101.33 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.